என் மகனுக்கு கடந்த 7,8 ஆண்டுகளாக திருமணத்திற்கு முயற்சி செய்தும் பொருத்தமான பெண் ஜாதகம் அமையவில்லை. அமைந்தாலும் ஏதோ ஒரு காரணத்துக்காக தள்ளிப்போகிறது. லண்டனின் வேலை செய்யும் அவர், எப்போது நாடு திரும்புவார்? எப்போது திருமணம் நடைபெறும்? - வாசகர், திருப்பூர்

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், மீன ராசி. லக்னாதிபதி சுபக்கிரகத்துடன் நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து திக்பலம் பெற்று அவர்களின் பார்வை லக்னத்தைப் பார்ப்பது சிறப்பு.

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், மீன ராசி. லக்னாதிபதி சுபக்கிரகத்துடன் நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து திக்பலம் பெற்று அவர்களின் பார்வை லக்னத்தைப் பார்ப்பது சிறப்பு. சுக பாக்கியாதிபதியான சுக்கிரபகவான் சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருப்பதால் அவருக்கு குடும்ப வாழ்க்கை சுகமாகவே செல்லும். அதோடு பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான மளாவிகாயோகம் உண்டாகிறது. சந்திர மங்கள யோகம் முழுமையாக ஏற்படுகிறது. களத்திர ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் குருபகவானின் இல்லத்தை அடைகிறார். தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் சந்திரபுக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். இன்னும் மூன்றாண்டுகளுக்குப்பிறகு தாய்நாடு திரும்புவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com