என் மகளுக்கு அரசு வேலை விரைவில் கிடைக்குமா? திருமணம் எப்போது கைகூடும்? எங்கள் ஊரிலேயே வரன் அமையுமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், திருச்சி

உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், மிதுன ராசி. தற்சமயம் லக்னத்தில் அமர்ந்திருக்கும் தன பூர்வ புண்ணியாதிபதியான புதபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது.

உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், மிதுன ராசி. தற்சமயம் லக்னத்தில் அமர்ந்திருக்கும் தன பூர்வ புண்ணியாதிபதியான புதபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. மாங்கல்ய ஸ்தானாதிபதியும் லக்னாதிபதியும் மாங்கல்ய ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு. அதோடு அவர்களின் பார்வை அங்கு அமர்ந்திருக்கும் தர்மகர்மாதிபதியின் மீது படிவதால் படித்த வரன் இந்த ஆண்டுக்குள் உங்கள் ஊரிலேயே அமைந்து திருமணம் கைகூடும். அரசு உத்தியோகமும் கிடைக்கும். மற்றபடி மணவாழ்க்கை, எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com