என் பேத்திக்கு அரசாங்கத்தில் வேலை கிடைக்குமா? 7-இல் செவ்வாய், 8- இல் கேது மாங்கல்ய தோஷம். திருமணம் எந்த வயதிற்கு மேல் செய்ய வேண்டும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? - வாசகர், திருச்சி 

உங்கள் பேத்திக்கு விருச்சிக லக்னம், மிதுன ராசி. லக்னாதிபதியான செவ்வாய்பகவான் களத்திர ஸ்தானத்தில் இருப்பது செவ்வாய் தோஷமல்ல. களத்திர ஸ்தானாதிபதி சுக்கிரபகவான் தொழில் ஸ்தானாதிபதி,

உங்கள் பேத்திக்கு விருச்சிக லக்னம், மிதுன ராசி. லக்னாதிபதியான செவ்வாய்பகவான் களத்திர ஸ்தானத்தில் இருப்பது செவ்வாய் தோஷமல்ல. களத்திர ஸ்தானாதிபதி சுக்கிரபகவான் தொழில் ஸ்தானாதிபதி, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி ஆகியோருடன் இணைந்திருப்பதும் அவர் தொழில் ஸ்தானாதிபதியின் சாரத்தில் அமர்ந்திருப்பதும் நன்மையாகும். அதோடு தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் மாங்கல்ய ஸ்தானாதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். வங்கி, காப்பீடு துறைகளில் அரசு சம்பந்தப்பட்ட உத்தியோகமும் அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும். ராகுபகவானை, குருபகவான் பார்வை செய்வதால் சர்ப்பதோஷ பாதிப்பு இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com