என்னுடைய இரண்டாவது மகன் பி.டெக் படித்துள்ளார். அவருக்கு பல இடங்களில் பார்த்தும் பொருத்தமான பெண் கிடைக்கவில்லை. சரியான வேலையும் கிடைக்கவில்லை. படிப்பிற்கேற்ற வேலை மற்றும் திருமணம் எப்போது அமையும்? - வாசகர், திருப்பத்தூர் 

உங்கள் மகனுக்கு துலாம் லக்னம், விருச்சிக ராசி. தொழில் ஸ்தானாதிபதி நீச்சபங்க ராஜயோகம் பெற்றும் தொழில் ஸ்தானத்தில் சர்ப்பக்கிரகமான கேதுபகவான் இருப்பதும் சிறப்பு.

உங்கள் மகனுக்கு துலாம் லக்னம், விருச்சிக ராசி. தொழில் ஸ்தானாதிபதி நீச்சபங்க ராஜயோகம் பெற்றும் தொழில் ஸ்தானத்தில் சர்ப்பக்கிரகமான கேதுபகவான் இருப்பதும் சிறப்பு. தற்சமயம் லக்னாதிபதியான சுக்கிரபகவானின் தசையில் களத்திர நட்பு ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானின் புக்தி நடக்கிறது. அதனால் அவருக்கு இந்த ஆண்டே நிரந்தர உத்தியோகமும் திருமணமும் கைகூடும். மற்றபடி புத ஆதித்ய யோகம், சசமஹா யோகம், அஷ்டமஹா நாகயோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com