எனக்கு நிரந்தரமான வேலை அல்லது தொழில், வீடு எப்பொழுது அமையும்? என்ன தொழில் செய்யலாம்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், திருவாரூர்

உங்களுக்கு துலா லக்னம், கும்ப ராசி. தொழில் ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும் சுக பூர்வபுண்ணியாதிபதி தொழில் ஸ்தானத்திலும் அமர்ந்திருக்கிறார்கள்.

அரசுப்பணி நிரந்தரமாகும்
உங்களுக்கு துலா லக்னம், கும்ப ராசி. தொழில் ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும் சுக பூர்வபுண்ணியாதிபதி தொழில் ஸ்தானத்திலும் அமர்ந்திருக்கிறார்கள். லாபாதிபதி லாப ஸ்தானத்திலும் பாக்கியாதிபதி அயன ஸ்தானத்தில் உச்சம் பெற்று நீச்சம் பெற்ற லக்னாதிபதிக்கு நீச்சபங்க ராஜயோகத்தைக் கொடுக்கிறார். அதோடு அயன ஸ்தானத்தில் தனாதிபதியும் இணைந்திருக்கிறார். இவர்களை குருபகவான் ஐந்தாம் பார்வையாகப் பார்வை செய்வதும் சிறப்பு. தற்சமயம் சனிமஹா தசையில் லக்னாதிபதியின் புக்தி நடப்பதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அரசுப்பணி நிரந்தரமாகும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com