என் தாயாரின் பெயரில் உள்ள வீட்டை விற்க எடுத்த நடவடிக்கையில் பத்திர பதிவு முடியாமல் தள்ளிக்கொண்டு போகிறது. மூத்த சகோதரி மகன் மிகவும் தடையாக உள்ளார். எப்போது பத்திர பதிவு நடக்கும்? - வாசகர், திண்டுக்கல்

உங்களுக்கு துலாம் லக்னம், மிதுன ராசி. லக்னாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகள் கர்ம ஸ்தானத்தில் இணைந்து இருக்கிறார்கள்.

வீடு விற்பனையாகும்
 உங்களுக்கு துலாம் லக்னம், மிதுன ராசி. லக்னாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகள் கர்ம ஸ்தானத்தில் இணைந்து இருக்கிறார்கள். சுக பூர்வ புண்ணியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். லாபாதிபதியும் சந்திரபகவானும் பாக்கிய ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். தற்சமயம் சனிமஹா தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு உங்கள் தாயின் பெயரில் உள்ள வீடு விற்றுவிடும். எதிர்காலம், பொருளாதாரம் ஆகியவை சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com