எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது அமையும்? - வாசகர், நாகர்கோவில்

உங்களுக்கு மகர லக்னம், தனுசு ராசி. லக்ன, குடும்பாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்து புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.

உங்களுக்கு மகர லக்னம், தனுசு ராசி. லக்ன, குடும்பாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்து புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். களத்திர ஸ்தானாதிபதி மறைவு பெற்றிருந்தாலும் களத்திர ஸ்தானத்தில் பாக்கியாதிபதி அமர்ந்திருப்பது சிறப்பு. தற்சமயம் அஷ்டமாதிபதியின் தசை முடியும் தருவாயில் உள்ளது. குருபகவானின் பார்வை கர்ம ஸ்தானத்தின் மீது படிகிறது. உங்களுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதால் அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com