என் மகனுக்கு திருமணமாகி விவாகரத்தாகி விட்டது. மறுமணம் உண்டா? குடும்ப வளர்ச்சி, எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர்

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், மீன ராசி. தற்சமயம் தன, பாக்கியாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கிறது.

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், மீன ராசி. தற்சமயம் தன, பாக்கியாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் குடும்ப ஸ்தானத்திற்கு ஏற்ற சமதோஷம் உள்ள பெண் அமைந்து மறுமணம் கைகூடும். புத்திர ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்திருப்பதால் புத்திர பாக்கியத்திற்கு குறைவு ஏற்படாது. தொழில் ஸ்தானமும் லாப ஸ்தானமும் வலுவாக உள்ளதால் செய்தொழிலில் நல்ல வளர்ச்சியை எட்டி விடுவார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com