உங்கள் மகளுக்கு விருச்சிக லக்னம், கும்ப ராசி. களத்திர ஸ்தானாதிபதி ராசியில் நீச்சம் பெற்றாலும் நவாம்சத்தில் ஆட்சி பெறுவதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. தற்சமயம் சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கும் சுக, பஞ்சமாதிபதியின் தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் திருமணம் கைகூடும். தெற்கு திசையிலிருந்து வரன் அமைவார். அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் உத்தியோகம் அமையும். மற்றபடி ஒரு கிரகத்துக்கு முழுமையான நீச்சபங்க ராஜயோகம் ஏற்பட்டுவிட்டால் மற்ற நீச்ச கிரகங்களுக்கும் நீச்சபங்க ராஜயோகம் கிடைத்துவிடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.