நான் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறேன். வளைகுடா நாட்டிற்குச் சென்று பள்ளி ஆசிரியராக பணிபுரிய விண்ணப்பித்துள்ளேன். இது சரியான நேரமா? இந்த வாய்ப்பு கைகூடுமா? என் ஜாதகத்தில் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பாக்கியம் உள்ளதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகி, நாகர்கோவில்

உங்களுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி. லக்னத்தில் பாக்கியாதிபதியான குருபகவான் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தையும் சப்தம ஸ்தானத்தையும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார்.

உங்களுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி. லக்னத்தில் பாக்கியாதிபதியான குருபகவான் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தையும் சப்தம ஸ்தானத்தையும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியும் லக்னாதிபதியும் சேவை கிரகமான ஆறாமதிபதியான புதபகவானும் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இவர்கள் மூவரின் மீதும் குருபகவானின் பார்வை படிகிறது. குருசந்திர யோகம், சிவராஜ யோகம், குருமங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. வெளிநாடு வாசத்திற்கு சர ராசிகளும் நீர் ராசிகளும் பாக்கிய ஸ்தானமும் அயன ஸ்தானமும் குறிப்பாக, வலுத்திருக்க வேண்டும் என்பது ஜோதிட விதி. அதோடு சாதகமான தசாபுக்திகளும் நடக்கும் காலங்கள் அமைந்தால் வெளிநாடு செல்லும் முயற்சிகள் சுலபமாக வெற்றி பெறும். உங்களுக்கு தற்சமயம் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் (சர ராசி) குருபகவானின் பார்வையைப் பெற்றிருக்கும் ராகுபகவானின் தசையில் சுக ஸ்தானத்தில் (சர ராசியில்) அமர்ந்திருக்கும் சனிபகவானின் புக்தி நடக்கிறது. அதனால் வெளிநாட்டிற்கு முயற்சி செய்யத் தொடங்கியிருக்கிறீர்கள். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு தொடங்கும் குருபகவானின் பார்வையை பெற்ற புதபகவானின் புக்தியில் வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் யோகம் உண்டாகும். தொடர்ந்து யோக தசைகள் நடப்பதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com