28 வயதாகும் என் மகளுக்கு திருமணம் தாமதமாகிது. எப்போது திருமணம் நடைபெறும்? எம்.டி., உயர் கல்வி (பொது மருத்துவம் அல்லது குழந்தைகள் மருத்துவம்) படிக்க எப்போது இடம் கிடைக்கும்? எம்.டி., படித்த மாப்பிள்ளை கிடைப்பாரா? - வாசகி, உடுமலை 

உங்கள் மகளுக்கு துலா லக்னம், கடக ராசி. களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்று லக்ன சுபர்களுடன் சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்.

உங்கள் மகளுக்கு துலா லக்னம், கடக ராசி. களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்று லக்ன சுபர்களுடன் சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். அதோடு சுகஸ்தானாதிபதியை குருபகவான் பார்வை செய்வதும் சிறப்பு. தற்சமயம் லக்னாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப்பிறகு உயர் கல்வி குழந்தை மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் மருத்துவ உயர்படிப்பு படித்த வரன் அமைந்து திருமணம் கைகூடும். சுக ஸ்தானத்திற்கு ஏற்ற சம தோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com