எனது சகோதரருக்கு எப்போது திருமணம் கைகூடும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், சென்னை

உங்கள் சகோதரருக்கு கும்ப லக்னம், விருச்சிக ராசி. அவருக்கு சுக ஸ்தானத்தில் சுகாதிபதி ஆட்சி பெற்று அமர்ந்து களத்திர ஸ்தானாதிபதி, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் ராகுபகவானுடன் இணைந்திருக்கிறார்.

உங்கள் சகோதரருக்கு கும்ப லக்னம், விருச்சிக ராசி. அவருக்கு சுக ஸ்தானத்தில் சுகாதிபதி ஆட்சி பெற்று அமர்ந்து களத்திர ஸ்தானாதிபதி, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் ராகுபகவானுடன் இணைந்திருக்கிறார். சுகாதிபதி கேந்திர ஸ்தானத்திற்கு அதிபதியாக இருந்தாலும் அசுபக் கிரகங்களுடன் இணைந்திருப்பதால் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கி விடுகிறது. தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளது. அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com