என் மகனுக்கு 36 வயதாகிறது. எப்போது திருமணம் கைகூடும்? நிறைய ஆலயங்களுக்குச் சென்று பரிகாரம் செய்துள்ளோம். எங்கள் இனத்தில் பெண் அமையுமா? எங்கு, எப்போது, எத்திசையில் அமையும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - கணேசன், கரூர்

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம். தனுசு ராசி. களத்திர ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்தில் அமர்ந்து

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம். தனுசு ராசி. களத்திர ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான புதபகவான்ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெறறு தர்மகர்மாதிபதியான சனிபகவானுடன் இணைந்திருக்கிறார். சிவராஜயோகமும் விபரீத ராஜயோகமும் உள்ளது. தற்சமயம் தைரிய ஸ்தானத்தில் உள்ள ராகுபகவானின் தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். பெற்றோர் நிச்சயித்த வரன் தென்கிழக்குத் திசையிலிருந்து அமைந்து கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com