நான் நகை தொழில் செய்து வருகிறேன். ராகு தசை முடியும்போது தொழிலில் மிகப் பெரிய சரிவுக்குள்ளாகி எனது மற்றும் என் தந்தையின் சொத்துக்களை விற்று கடன்களை அடைத்தேன். இப்பொழுதும் மிகவும் கஷ்ட நிலையிலேயே ஜீவனம் நடக்கிறது. எப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டேனே என்று நினைத்து வருந்துகிறேன். என் மகன் ஜாதகப்படி திருவோணத்தில் பிறந்ததால் தந்தையின் வாழ்க்கை ஒரு கோணமாய் போய்விடும் என்கிறார்கள். பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?

உங்களுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி. சந்திரபகவான் அஷ்டமாதிபதியாகி சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார்.

உங்களுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி. சந்திரபகவான் அஷ்டமாதிபதியாகி சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். லக்னம் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய புத்திர புத்தி மற்றும் பன்னிரண்டாம் வீடான அயன ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் பாக்கிய ஸ்தானத்தில் கேதுபகவானின் 
சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத்திரிகோண ராசியான மேஷ ராசியை அடைகிறார். பாக்கியாதிபதியான சூரியபகவான் சுக ஸ்தானத்தில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். தனம் வாக்கு குடும்பம் மற்றும் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சூரிய
பகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) மற்றும் லாப ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிரபகவான் ஆறாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) ஆட்சி பெற்று அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். 
களத்திர நட்பு மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியில் நீச்சம் பெறுகிறார். கேதுபகவான் மூன்றாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்ட நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியில் நீச்சம் பெறுகிறார். கேதுபகவான் மூன்றாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். ராகுபகவான் ஒன்பதாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார்.
உங்களுக்கு லக்னாதிபதி, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதிகளின் இணைவு பாக்கிய ஸ்தானத்தில் அமைவது சிறப்பு. இதனால் குருமங்கள யோகம் உண்டாகிறது. ஒரு ஜாதகம் அடிப்படையில் வலுவாக உள்ளதை லக்னம் மற்றும் லக்னாதிபதியின் பலத்தைக் கொண்டு அறிய வேண்டும். இது முழுமையாக அமைந்து விட்டால் வாழ்க்கையில் போராட்டங்களை ஒரு காலத்தில் சந்தித்தாலும் மறுபடியும் பழைய நிலைமைக்கும் மேல் சிறப்பான முன்னேற்றங்களை அடைந்து விடுவார். ஐந்தாம் வீட்டை விதி வீடு என்கிறோம். இந்த வீட்டுக்கதிபதி பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் கௌரவமான வாழ்க்கை அமையும். அதோடு லக்னத்தையும் தைரிய ஸ்தானத்தையும் தொழில் ஸ்தானாதிபதியையும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் லக்னாதிபதியான குருபகவான் பார்ப்பது சிறப்பு. உங்களுக்கு சுக ஸ்தானாதிபதியான நான்காமதிபதி ஒன்பதாம் வீட்டிலும் ஒன்பதாமதிபதியான பாக்கியாதிபதி நான்காம் வீட்டிலும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள். இந்த பரிவர்த்தனை யோகத்தால் இந்திரனுக்கொப்பான அனைத்து சுக போகங்களும் சம்பத்துகளும் ஜாதகரை வந்தடையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த யோகத்தில் ஜாதகத்தில் சுக்கிரபகவான் கெட்டு இருக்கக் கூடாது என்றும் உள்ளது. உங்களுக்கு சுக்கிரபகவான் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்றிருப்பது நலமென்றாலும் ஆறாமிடத்தில் சுக்கிரபகவான் இருப்பதை ஜோதிடம் அவ்வளவு சிறப்பென்று கூறவில்லை. இது பிருகு ஷட் தோஷம் என்று கூறப்படுகிறது. அதனால் ஆறாமிடத்து ஆதிபத்யம் வேலை செய்த பிறகே லாபாதிபத்யம் வேலை செய்யும் என்று கூறவேண்டும். 
ஏன்.. என் சொத்துகளும் என் தந்தையின் சொத்துகளும் அழிந்தன என்று கேட்டுள்ளீர்கள். பொதுவாகவே, சர்ப்பக்கிரகங்கள், சனி, சுக்கிர பகவான்களின் தசைகளில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதனால் ஒரு பாதி முடிந்தவுடன் பலருக்கு முன்பாதியில் நடந்த பலன்களுக்கு மாறுபட்டு நடக்கும். உங்களுக்கு ராகுபகவானின் தசையில் பிற்பகுதியில் தொழிலில் மிகப்பெரிய சரிவு உண்டாகி சொத்துகள் அனைத்தையும் இழக்கும் நிலை உண்டாகியது. "சனி வத் ராகு' என்பது ஜோதிட வழக்கு. அதாவது சனிபகவான் செய்ய வேண்டிய பலன்களை (நல்லது, கெட்டது இரண்டும்) ராகு
பகவான் செய்வார் என்பதாகும். சனிபகவான் சூரியபகவானின் சாரத்திலும் சூரியபகவான் சனிபகவானின் சாரத்திலும் சார பரிவர்த்தனை (நட்சத்திர பரிவர்த்தனை) பெற்றிருக்கிறார்கள். இதை "சூட்சும பரிவர்த்தனை' என்றும் கூறுவார்கள். இது பித்ரு தோஷத்தைக் குறிக்கிறது. அதேநேரம் 3,6,9,11 ஆம் வீடுகளில் சனிபகவான் இருந்தால் விதி தீர்க்கமாகும் என்பது விதி. அதாவது தீர்க்காயுள் உண்டு. மேலும் சனிபகவானுடன் பன்னிரண்டாமதிபதி இணைந்தால் வீண் அபவாதங்கள் உண்டாகும் என்றும் உள்ளது. அதேநேரம் செவ்வாய்பகவான் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியாக ஆனதால் தந்தையின் சொத்துக்களையும் விற்று கடனை அடைத்து விட்டீர்கள். உங்களின் ஜாதகத்தில் மற்றொரு விசேடமான அமைப்பு உள்ளதையும் காண்கிறோம். அதாவது பித்ருகாரரும் (சூரியபகவான்) பித்ருதானமும் (ஒன்பதாமிடம்) வலுவாக உள்ளது. பித்ரு ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் இருப்பது அந்த வீட்டிற்கு வலு சேர்க்கிறது. இதனால் தந்தையால் அனுகூலங்களைப் பெற்றீர்கள். தற்சமயம் லக்னாதிபதியான குருபகவானின் தசையில் சுயபுக்தி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நடக்கும். அதனால் உங்கள் செய்தொழிலில் படிப்படியான வளர்ச்சி உண்டாகத் தொடங்கிவிடும். வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல. " இதுவும் கடந்து போகும்' என்கிற வழக்கு உள்ளது. அதனால் மறுபடியும் வளர்ச்சிப் பாதையில் பயணப்படுவீர்கள். 
உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம். சூரியபகவான் உச்சம். திருவோண நட்சத்திரம். சித்திரை மாதத்தில் பிறந்து திருவோண நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் தந்தையின் வாழ்க்கை ஒரு கோணமாய் போய்விடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவருக்கு தற்சமயம் லாப ஸ்தானத்திலுள்ள சுக பாக்கியாதிபதியான வர்கோத்தமம் பெற்ற செவ்வாய்பகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. பூர்வபுண்ணிய ஸ்தானத்திலிருந்து குருபகவான் பாக்கிய ஸ்தானத்தையும் தந்தை காரகர் சூரியபகவானையும் லாப ஸ்தானத்தையும் செவ்வாய்பகவானையும் லக்னத்தையும் பார்வை செய்கிறார். அதனால் இவரின் ஜாதகப்படியும் நீங்கள் சிறப்படைந்து விடுவீர்கள் என்று உறுதியாகக் கூறலாம். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com