எனக்கு ஐந்து மகள்கள். அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. மருத்துவராகப் பணிபுரியும் என்மகனுக்கு எப்போது திருமணம் கைகூடும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?- ராமராஜன், விழுப்புரம்

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், லக்னாதிபதி ஆட்சி, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி உச்சம்.

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், லக்னாதிபதி ஆட்சி, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி உச்சம். மேலும் ஆட்சி பெற்ற லக்னாதிபதியை குருபகவான் பார்வை செய்வது சிறப்பு. புத ஆதித்ய யோகம், குருசந்திர யோகம், சந்திர மங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. தர்மகர்மாதிபதியான சனிபகவான் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து லக்னத்தை பார்வை செய்கிறார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com