என் மகனுக்கு 18 வயதாகிறது. கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் போய்வர வேண்டும் என்கிறார். அவருக்கு வாகனம் ஓட்டினால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிடர் கூறுகிறார். வாகன யோகம் உள்ளதா? இதற்கு ஏதும் பரிகாரம் உள்ளதா?- வாசகி, கோயம்புத்தூர் 

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம் அல்ல. மீன லக்னம். அவிட்ட நட்சத்திரம், மகர ராசி. லக்னாதிபதியான குருபகவான் லக்னத்திலேயே ஆட்சி பெற்று இருக்கிறார்.

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம் அல்ல. மீன லக்னம். அவிட்ட நட்சத்திரம், மகர ராசி. லக்னாதிபதியான குருபகவான் லக்னத்திலேயே ஆட்சி பெற்று இருக்கிறார். வாகன காரகரான சுக்கிரபகவான், சூரியபகவானுடன் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இணைந்து குருபகவானால் பார்க்கப்படுகிறார். தற்சமயம் ஆறாம் வீட்டில் பலம் பெற்ற ராகுபகவான்அமர்ந்து தசையை நடத்துகிறார். அதனால் வாகனம் ஓட்டினால் பிரச்னைகள் என்று எதுவும் ஏற்படாது. மேலாண்மை துறையில் மேற்படிப்பை படிக்க வைக்கலாம். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com