வயிற்றுவலியால் அவதிபடும் என் மகனின் நோய் எப்போது சரியாகும்? வேலை வாய்ப்பு எப்போது கிடைக்கும்? - வாசகர், தேவகோட்டை

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், விருச்சிக ராசி. ஆறாம் வீட்டுக்கதிபதியான செவ்வாய்பகவான் லக்னத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியுடன்

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், விருச்சிக ராசி. ஆறாம் வீட்டுக்கதிபதியான செவ்வாய்பகவான் லக்னத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்க, அவர்களை குருபகவான் பார்வை செய்கிறார். தற்சமயம் உச்சம் பெற்ற லக்ன சுகாதிபதியான புதபகவானின் தசை நடக்கிறது. புதபகவானை பாக்கியாதிபதியான சனிபகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து பார்வை செய்கிறார். அதனால் அவருக்கு ஏற்பட்டுள்ள வயிறு சம்பந்தமான உபாதைகள் தற்காலிகமானது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப்பிறகு முழுமையாக தீர்ந்துவிடும். இந்த காலகட்டத்தில் படிப்புக்கு ஏற்ற உத்தியோகமும் அமைந்து விடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com