30 வயதாகும் எனக்கு அரசு வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய வாய்ப்புண்டா? திருமண யோகம் உள்ளதா? ஆயுள் எப்படி உள்ளது? - வாசகர், உளுந்தூர்பேட்டை

உங்களுக்கு மீன லக்னம், கன்னி ராசி. தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் தைரிய ஸ்தானத்தில் இருந்து களத்திரம், பாக்கியம் மற்றும் லாப ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார்.

உங்களுக்கு மீன லக்னம், கன்னி ராசி. தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் தைரிய ஸ்தானத்தில் இருந்து களத்திரம், பாக்கியம் மற்றும் லாப ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். தொழில் ஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்திருப்பதும் சிறப்பு. தன பாக்கியாதிபதி செவ்வாய்பகவான் லக்ன கேந்திரத்தில் அமர்ந்திருப்பதால் வருமானத்திற்குக் குறைவு ஏற்படாது. சந்திரமங்கள் யோகம், குருச்சந்திர யோகம், போன்ற யோகங்கள் உண்டாகி மூன்று திரிகோணாதிபதிகளும் வலுவாக இருக்கிறார்கள் என்று கூறவேண்டும். தற்சமயம் வர்கோத்தமம் பெற்ற ராகுபகவானின் தசையில் புதபகவானின் புக்தி நடக்கிறது. புதபகவான் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று அஷ்டம ஸ்தானத்தில் சூரியபகவானுடன் இணைந்து புதஆதித்ய யோகத்தைப் பெறுகிறார். இந்த புதபகவானின் புக்தி முடிவதற்குள் அதாவது இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அரசு உத்தியோகம், திருமணம் இரண்டும் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானையும் துர்க்கையையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com