என் அண்ணனுக்கு திருமணம் தள்ளிப்போகிறது. எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவருக்கு எப்போது திருமணம் நடைபெறும். அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும்? எந்தத் தொழில் சிறப்பாக அமையும்? - வாசகர், கீழ்க்கட்டளை

உங்கள் சகோதரருக்கு கும்ப லக்னம், கடக ராசி. தற்சமயம் சுகஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கும் சுக்கிரபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது

உங்கள் சகோதரருக்கு கும்ப லக்னம், கடக ராசி. தற்சமயம் சுகஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கும் சுக்கிரபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. அவருக்கு இந்த ஆண்டே களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். அவரை பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரச் சொல்லவும். மருந்து சம்பந்தப்பட்ட தொழில் ஏற்றதாக அமையும். குலதெய்வ வழிபாட்டையும் வருடமொருமுறை செய்யச் சொல்லவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com