என் பேத்தி குள்ளமாக இருப்பதால் திருமணம் தடையாக உள்ளது. எப்போது திருமணம் கைகூடும்? தலைச்சன்+ தலைச்சன் திருமணம் செய்யலாமா? - வாசகர், திருவண்ணாமலை

உங்கள் பேத்திக்கு மீன லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். களத்திர ஸ்தானாதிபதியான புதபகவான் சுக ஸ்தானத்திற்கும்

உங்கள் பேத்திக்கு மீன லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். களத்திர ஸ்தானாதிபதியான புதபகவான் சுக ஸ்தானத்திற்கும் அதிபதியாகி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் அஷ்டம ஸ்தானத்தில் சுயசாரத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசையில் சுக்கிரபுக்தி நடக்கிறது. அதனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத்திற்குள் திருமணம் கைகூடும். மற்றபடி குள்ளமாக இருப்பதால் திருமணம் ஆகாது என்று கூறமுடியாது. மேலும் தலைச்சனுக்கு தலைச்சன் திருமணம் செய்யலாம். பல திருமணம் செய்யலாம். நன்றாக இருக்கிறார்கள். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் உங்கள் பேத்தியை துர்க்கையை வழிபட்டு 
வரச்சொல்லவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com