எனது மகனுக்கு 44 வயதாகிறது. எங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கும் என் மகன் மீண்டும் எங்களுடன் சேருவாரா? திருமணம் எப்போது நடைபெறும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்? - வாசகர், திருவாரூர்

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், சிம்ம ராசி. களத்திர ஸ்தானாதிபதி நீச்சம் பெற்றிருந்தாலும் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார்.

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், சிம்ம ராசி. களத்திர ஸ்தானாதிபதி நீச்சம் பெற்றிருந்தாலும் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். மேலும் லக்னாதிபதியும் நீச்சம் பெற்று உச்சம் பெற்றிருக்கும் பூர்வபுண்ணியாதிபதியான செவ்வாய் பகவானுடன் இணைந்து இருப்பதால் அவருக்கும் முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. அவருக்கு தற்சமயம் கேந்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசையில் குடும்பாதிபதியின் புக்தி இன்னும் இரண்டாண்டுகள் வரை நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் அவருக்கு நிரந்தர வேலை, திருமணம் ஆகியவை கைகூடும். குடும்பத்தாருடன் சேர்ந்து வாழ்வார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com