எனது மகனுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா? திருமணம் எப்போது கைகூடும்? எந்த திசையில் பெண் அமையும்? - பழனி, தர்மபுரி

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதி, சுகாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி மற்றும் ராகுபகவான்கள் களத்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார்கள்.

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதி, சுகாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி மற்றும் ராகுபகவான்கள் களத்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார்கள். களத்திர, அயன ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியில் ஆட்சி பெறுகிறார். தனுசு ராசியில் செவ்வாய்பகவான் சந்திரபகவானுடன் இணைந்து இருப்பதால் செவ்வாய்தோஷம் இல்லை. தற்சமயம் ராகுபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த பெண் தென் கிழக்குத் திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com