என் மகனுக்கு மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்பு அல்லது பொறியியல் சம்பந்தப்பட்ட படிப்பு அமையுமா?  - வாசகர், காட்பாடி 

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், மகர ராசி. கல்வி ஸ்தானாதிபதியான சனிபகவான் ஏழாம் வீடான நட்பு ஸ்தானத்தில் குருபகவானுடன் இணைந்து இருக்கிறார்.

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், மகர ராசி. கல்வி ஸ்தானாதிபதியான சனிபகவான் ஏழாம் வீடான நட்பு ஸ்தானத்தில் குருபகவானுடன் இணைந்து இருக்கிறார். கல்விக்காரகரான புதபகவான் வாக்கு ஸ்தானமான இரண்டாம் வீட்டில் கர்மாதிபதியான சூரியபகவானுடன் இணைந்திருக்கிறார். இவர்களுடன் சர்ப்பக் கிரகமான கேதுபகவான் இணைந்திருக்கிறார். லக்னாதிபதி பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து கல்வி ஸ்தானாதிபதி மற்றும் குருபகவான்களை எட்டாம் பார்வையாகப் பார்வை செய்கிறார். அதோடு அவருக்கு தற்சமயம் குருபகவானின் சாரத்திலுள்ள ராகு பகவானின் தசையில் சனிபகவானின் புக்தி நடக்கிறது. அதனால் அவருக்கு பொறியியல் சம்பந்தப்பட்ட படிப்புகளில் மெக்கானிகல், சிவில் போன்ற பிரிவுகள் ஏற்றதாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com