என் மகனுக்கு ஆயில்ய நட்சத்திரம். இன்னும் திருமணம் கைகூடவில்லை. பரிகாரங்கள் செய்துள்ளோம். சொந்தத்தில் பெண் அமையுமா? இல்வாழ்க்கை, ஆரோக்கியம் , எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், ஆம்பூர்.

உங்கள் மகனுக்கு கடக லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். ஆயில்யம், மூலம், விசாகம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு திருமண காலத்தில் அவசியமில்லாத பேச்சுகள் பலராலும் பேசப்படுகிறது.

உங்கள் மகனுக்கு கடக லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். ஆயில்யம், மூலம், விசாகம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு திருமண காலத்தில் அவசியமில்லாத பேச்சுகள் பலராலும் பேசப்படுகிறது. இதை அனுபவ ரீதியாக பார்த்தால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றே கூறவேண்டும். அதனால் இந்த நட்சத்திரங்கள் பற்றி கவலைப் படாமல் திருமணம் செய்யலாம் என்பதே எங்கள் கருத்தாகும். உங்கள் மகனுக்கு சுக ஸ்தானமும் சுகாதிபதியும் சிறிது பாதிக்கப்பட்டுள்ளதால் திருமணம் தாமதமாகிறது. மற்றபடி இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து அனுகூலமான திருப்பங்கள் உண்டாகிறது. அதனால் இன்னும் ஓராண்டுக்குள் படித்த பெண் தெற்கு திசையிலிருந்து அந்நிய சம்பந்தத்தில் அமைந்து திருமணம் கைகூடும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com