என் மகனுக்கு கணிப்பொறி துறையில் எந்த பிரிவில் உயர்கல்வி பொருத்தமாக இருக்கும்? இக்கல்வி நல்ல வேலை வாய்ப்பை அளிக்குமா? - வாசகர், பெங்களூரு

உங்கள் மகனுக்கு துலா லக்னம், கும்ப ராசி. லக்னாதிபதி சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானாதிபதியைப் பார்வை செய்கிறார்

உங்கள் மகனுக்கு துலா லக்னம், கும்ப ராசி. லக்னாதிபதி சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானாதிபதியைப் பார்வை செய்கிறார். கல்வி ஸ்தானம் மற்றும் பூர்வபுண்ணிய புத்தி ஸ்தானத்திற்கும் அதிபதியான சனிபகவான் நீச்சமடைந்தாலும் லக்ன கேந்திரத்தில் இருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். பாக்கியாதிபதியான புதபகவான் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. அவருக்கு தற்சமயம் ராகுபகவானின் தசை முடியும் தருவாயில் உள்ளது. அவருக்கு கணினி சம்பந்தப்பட்ட துறையில் பட்டப்படிப்பை படிக்க வைக்கலாம். மேற்படிப்பை மேலாண்மைத்துறையில் படிக்க வைக்கலாம். எதிர்காலம், வேலை வாய்ப்பு சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com