முதுகலைப் பட்டம் பெற்ற என் மகன், அரசுப்பணி தேர்வுக்காக பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறான். அரசு வேலை கிடைக்குமா? எப்போது கிடைக்கும்? சொந்த வீடு அமையும் பாக்கியமுண்டா? திருமணம் எப்போது கைகூடும்? - வாசகர், ஈரோடு

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், விருச்சிக ராசி. தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் லக்னத்தில் அமர்ந்து தசையை நடத்துகிறார்.

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், விருச்சிக ராசி. தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் லக்னத்தில் அமர்ந்து தசையை நடத்துகிறார். லக்னாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி மற்றும் புதபகவான்கள் தன ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். களத்திர ஸ்தானாதிபதி களத்திர நட்பு ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்வதும் சிறப்பு. அதனால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அரசு வேலை, திருமணம் ஆகிய இரண்டும் கைகூடும். சொந்த வீடு கட்டும் பாக்கியம் உண்டு. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com