எனது பேத்தி ஆடிட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்து ஆடிட்டராவாரா? திருமணம் எப்போது நடைபெறும்? பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளை அமைவாரா? மருமகனுக்கு இதயப் பிரச்னை உள்ளது. ஜாதகப்படி அறுவைச்சிகிச்சை செய்துகொள்ளலாமா? மகள், மருமகன், பேத்தி ஆகியோருக்கு தோஷம் உள்ளதா? - வாசகர், எஸ்.பி. கோயில் 

உங்கள் பேத்திக்கு கடக லக்னம், மகர ராசி. கல்வி ஸ்தானத்தில் கல்வி ஸ்தானாதிபதி, ஆட்சி பெற்று நீச்சபங்க ராஜயோகம் பெற்ற வாக்கு ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார்.

உங்கள் பேத்திக்கு கடக லக்னம், மகர ராசி. கல்வி ஸ்தானத்தில் கல்வி ஸ்தானாதிபதி, ஆட்சி பெற்று நீச்சபங்க ராஜயோகம் பெற்ற வாக்கு ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார். இவர்கள் பாக்கியாதிபதியான குருபகவான் பார்வை செய்வதும் சிறப்பு. கல்விக்காரகரும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதியின் சாரத்தில் அமைந்திருக்கிறார்.
 தற்சமயம் தசையை நடத்தும் ராகுபகவானும் குருபகவானின் பார்வையை பெறுகிறார்.இன்னும் 3 ஆண்டுகளுக்குள் ஆடிட்டர் படிப்பை படித்து முடித்துவிடுவார். வங்கி, காப்பீடு போன்ற தனியார் துறையில் உத்தியோகம் அமையும். 24 வயதிற்குள் பெற்றோர் நிச்சயித்த திருமணம் கைகூடும்.
 உங்கள் மருமகனுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. இந்த ஆண்டே அவர்கள் குடும்பம் ஒன்றாகி விடும். உங்கள் பேத்தியும் சுமுகமாக நடக்கத் தொடங்கிவிடுவார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com