உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி. அரசுக் கிரகங்கள் வலுவாக உள்ளதால் வங்கி உத்தியோகம் இந்த ஆண்டே கிடைத்துவிடும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.