உங்கள் மகனுக்கு களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருப்பது சிறப்பு. சுக ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. தற்சமயம் சுகாதிபதியின் தசையில் லாபாதிபதியின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.