என் மகனுக்கு மறுமணம் நடைபெற வாய்ப்பு உண்டா? எப்போது திருமணம் நடைபெறும்? எங்களது குலதெய்வம் எது?  - வாசகர், மதுரை

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், ரிஷப ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகள் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள்.

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், ரிஷப ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகள் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். தற்சமயம் பாக்கியாதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியான பெண் அமைந்து மறுமணம் கைகூடும். தொடர்ந்து யோக தசைகள் நடப்பதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பித்ருதோஷம் இல்லை. உங்கள் குலதெய்வம் பெருமாள் என்று தெரிகிறது. மற்றுபடி பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com