எனது பேரன்பிறந்தது முதலே பேச முடியாத நிலையில் உள்ளான். பேச்சு வருமா? நிறைய பரிகாரங்கள் செய்துள்ளோம். வேறு பரிகாரங்கள் செய்ய வேண்டுமா?  - வாசகி, கோவில்பட்டி

உங்கள் பேரனுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி உச்சம் பெற்றிருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதி ஆகியோர் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

உங்கள் பேரனுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி உச்சம் பெற்றிருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதி ஆகியோர் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். வாக்கு ஸ்தானாதிபதி களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து திக்பலம் பெற்றிருக்கிறார். வியாதி ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் ஆட்சி பெற்றிருந்தாலும் அசுப சாரத்தில் இருப்பது குறை. தற்சமயம் 6 ஆம் வீட்டில் அஷ்டலட்சுமி யோகம் பெற்று அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கிரது. அவருக்கு 2020- ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் உடல் உபாதைகள் தீர்ந்து விடும். ஓரளவுக்கு நன்றாக பேசத் துவங்குவார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com