எனது மகள் எம்.பி.பி.எஸ்., முடித்துள்ளார். மேற்படிப்பு படிக்க விரும்புகிறார். வாய்ப்பு உண்டா? திருமணம் எப்போது அமையும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?  - வாசகர்

உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், விருச்சிக ராசி. கல்வி ஸ்தானாதிபதி மற்றும் கல்விக்காரகரான புதபகவான் ஆட்சி உச்சம் மூலத்திரிகோணம் பெற்று பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகளுடன்

உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், விருச்சிக ராசி. கல்வி ஸ்தானாதிபதி மற்றும் கல்விக்காரகரான புதபகவான் ஆட்சி உச்சம் மூலத்திரிகோணம் பெற்று பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகளுடன் இணைந்திருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதியும் ஆட்சி பெற்றிருக்கிறார். இந்த ஆண்டே மேற்படிப்பு படிக்க வாய்ப்பு தேடிவரும். இருதயம், தோல், கண் சம்பந்தப்பட்ட துறைகளில் படிப்பு அமையும். 2020 -ஆம் ஆண்டுக்குள் தகுதியான சம அந்தஸ்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் வளமாக அமையும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com