எனது ஆரோக்கியம், குழந்தைகளின் முன்னேற்றம், கடன் சுமை, தொழில் முன்னேற்றம் எவ்வாறு இருக்கும்? எனது மகனின் மணவாழ்க்கை, உத்தியோக முன்னேற்றம், குடும்ப ஒற்றுமை, மனநலம் எவ்வாறு இருக்கும்? - வாசகி, தஞ்சாவூர்

உங்களுக்கு விருச்சிக லக்னம், தனுசு ராசி. லக்னம் மற்றும் 6 ஆம் வீட்டுக்கு அதிபதியான செவ்வாய்பகவான் லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டில் அமர்ந்து நீச்சபங்க ராஜயோகம் பெற்ற தன, பூர்வபுண்ணிய

உங்களுக்கு விருச்சிக லக்னம், தனுசு ராசி. லக்னம் மற்றும் 6 ஆம் வீட்டுக்கு அதிபதியான செவ்வாய்பகவான் லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டில் அமர்ந்து நீச்சபங்க ராஜயோகம் பெற்ற தன, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவானால் பார்க்கப்படுவது சிறப்பு. அதோடு தற்சமயம் குருபகவானின் தசையும் நடக்கிறது. இதனால் ஆரோக்கியம், குழந்தைகளின் முன்னேற்றம் ஆகியவை சிறப்பாக அமையும் என்று கூற முடிகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப்பிறகு வருமானம் கூடத் தொடங்கும். 2020 -ஆம் ஆண்டு தொடங்கியவுடன் கடன் சுமையும் குறையத் தொடங்கும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானையும் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும். உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், ரிஷப ராசி. தற்சமயம் ராகுபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. இந்த காலகட்டத்திற்குள் மணவாழ்க்கை, குடும்ப ஒற்றுமை ஆகியவை சீர்பட்டு விடும். உத்தியோகத்திலும் ஓரளவு நல்ல நிலைமையை எட்டிவிடுவார். தொடர்வது உச்சம் பெற்ற குருபகவானின் தசையாக இருப்பதால் மனநலம், உடல்நலம் சீராகவே இருக்கும். எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com