என் மகனுக்கு திருமணம் தள்ளிப்போகிறது. எப்போது திருமணம் கைகூடும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், காரைக்குடி

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், ரிஷப ராசி. அவருக்கு ராகுபகவான் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருந்தாலும் குருபகவானுடன் இணைந்திருப்பதால் சர்ப்ப தோஷம் வெகுவாக குறைகிறது.

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், ரிஷப ராசி. அவருக்கு ராகுபகவான் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருந்தாலும் குருபகவானுடன் இணைந்திருப்பதால் சர்ப்ப தோஷம் வெகுவாக குறைகிறது. செவ்வாய்பகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருந்தாலும் இதை பரிகார செவ்வாய் என்று கூற வேண்டும். தன பாக்கியாதிபதியான சுக்கிரபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் இருப்பது சிறப்பாகும். இதனால் குடும்பத்தில் சுகம் நிறையும் என்று கூற வேண்டும். அவருக்கு தற்சமயம் ராகுபகவானின் தசையில் லக்னாதிபதியான புதபகவானின் புக்தி நடைபெறுகிறது. அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com