என் மகன் கணிப்பொறி பொறியியல் துறையில் மூன்று அரியர்ஸ் வைத்துள்ளார். எப்போது முடித்து பட்டம் வாங்குவார்? அரசுத் துறையில் வேலை அமையுமா? பணிபுரியும் மணமகள் அமைவாரா? வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகம் உள்ளதா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?- வாசகர், விருதுநகர்

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம். கல்வி ஸ்தானாதிபதியும் கல்வி காரகரும் பலம் பெற்று இருப்பது

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம். கல்வி ஸ்தானாதிபதியும் கல்வி காரகரும் பலம் பெற்று இருப்பது சிறப்பு. மேலும் கல்வி ஸ்தானத்தை குருபகவான் பார்வை செய்கிறார். அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் கல்வித் தகுதிக்கு ஏற்ற தனியார் துறையில் வேலை அமையும். அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் உத்தியோகம் பார்க்கும் பெண் அமைந்து திருமணம் கைகூடும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் கைகூடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com