எனது மூத்த மகளுக்கு எனது முயற்சியின் பேரில் திருமணம் கைகூடாது என்றும்; பிறர் முயற்சியின் பேரிலேயே திருமணம் கைகூடும் என்று ஜோதிடர் கூறுகிறார். சர்ப்பப் பரிகாரங்களும் செய்துள்ளோம். வேறு பரிகாரங்கள் செய்ய வேண்டுமா? எப்போது திருமணம் கைகூடும்? - வாசகர், முசிறி

உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், சிம்ம ராசி. தர்மகர்மாதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பது சிறப்பாகும்.

உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், சிம்ம ராசி. தர்மகர்மாதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பது சிறப்பாகும். பாதகாதிபதியாக சனிபகவான் தந்தை ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பது தந்தைக்கு கெடுதல் என்றும் தந்தையால் மகளுக்கு உதவியில்லை என்றும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவருக்கு தற்சமயம் சந்திரபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தி இந்த ஆண்டு இறுதி வரை நடக்கும். அந்த காலகட்டத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். சுக ஸ்தானத்திலுள்ள கிரகங்களுக்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சோர்க்க வேண்டியது அவசியம். உங்களுக்கு தற்சமயம் செவ்வாய்பகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. தொடரும் ராகுபகவானின் தசைகளும் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com