பி.இ., படித்து தனியார் நிறுவனத்தில் பணி புரிந்துவரும் எனக்கு வெளிநாட்டில் நிரந்தரமான தகுந்த வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது கைகூடும்? தாய்தந்தைக்கு ஆதரவாக இருப்பேனா? எதிர்காலம் எவ்வாறு அமையும்? - வாசகர், காரைக்குடி

உங்களுக்கு துலாம் லக்னம், மேஷ ராசி. இந்த ஆண்டு இறுதிக்குள் நீங்கள் செய்துவரும் பணியில் நிரந்தரம் செய்யப் படுவீர்கள்.

உங்களுக்கு துலாம் லக்னம், மேஷ ராசி. இந்த ஆண்டு இறுதிக்குள் நீங்கள் செய்துவரும் பணியில் நிரந்தரம் செய்யப் படுவீர்கள். படிப்படியாக வருமானம் கூடி இன்னும் இரண்டாண்டுகளுக்குள் கல்விக் கடனை அடைத்து விடுவீர்கள். 2020 -ஆம் ஆண்டுக்குப்பிறகு படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். 2022- ஆம் ஆண்டுக்குப்பிறகு சொந்த வீடு, வாகனம் ஆகியவை உண்டாகும். ஆறாமதிபதி விபரீத ராஜயோகம் பெற்றிருப்பதால் ஆரோக்கியம் சீராகவே அமையும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com