எனக்கு 77 வயதாகிறது. ஓரளவு ஆரோக்கியமாக உள்ளேன். எனக்கு செவ்வாய் தசை நடப்பதாகவும் செவ்வாய் தசை கண்டத்தைக் கொடுக்கும் என்றும் சொன்னார். இது சரிதானா?- வாசகர், ராஜபாளையம்

உங்களுக்கு ரிஷப லக்னம், கடக ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணியாதிபதியுடன் களத்திர ஸ்தானத்தில் இணைந்து இருப்பதும் தர்மகர்மாதிபதியான

உங்களுக்கு ரிஷப லக்னம், கடக ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணியாதிபதியுடன் களத்திர ஸ்தானத்தில் இணைந்து இருப்பதும் தர்மகர்மாதிபதியான சனிபகவான் ஆயுள் ஸ்தானாதிபதியுடன் இணைந்து இருப்பதும் சிறப்பு. தற்சமயம் ஆயுள் ஸ்தானாதிபதியான குருபகவானின் சாரத்தில் அமர்ந்திருக்கும் களத்திர நட்பு ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானின் தசை நடக்கிறது. அவரை சனிபகவான் பார்வை செய்வதால் செவ்வாய் மகா தசையில் கண்டம் என்று எதுவும் வராது. மற்றபடி நீங்கள் செய்து வரும் ஐந்தெழுத்து ஜபம் சரியானது மற்றும் போதுமானது. தீர்க்காயுள் உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com