என் மகன் பி.டெக் முடித்து நல்ல வேலையில் உள்ளார். மேற்படிப்புக்கு தேர்வு எழுதியும் நல்ல தரவரிசையில் வர இயலவில்லை. மீண்டும் முயற்சிக்கலாமா? திருமணம் எப்போது அமையும்?- வாசகர்

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். கல்வி ஸ்தானத்தில் பூர்வபுண்ணிய புத்திர புத்தி மற்றும் ருணம் ரோக சத்ரு ஸ்தானாதிபதியான சனிபகவான் பாக்கியாதிபதியான

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். கல்வி ஸ்தானத்தில் பூர்வபுண்ணிய புத்திர புத்தி மற்றும் ருணம் ரோக சத்ரு ஸ்தானாதிபதியான சனிபகவான் பாக்கியாதிபதியான சுக்கிரபகவானின் சாரத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்திலுள்ள குருபகவானால் பார்க்கப் படுகிறார். தற்சமயம் லக்னத்திலேயே ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்ற புதபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. அவருக்கு தற்சமயம் வெளிநாடுகளுக்கு மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. மேலும் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த நல்ல பெண் அந்நிய உறவில் அமைந்து திருமணம் கைகூடும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உள்ளது. பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com