உங்களுக்கு மேஷ லக்னம், கடக ராசி. லக்னாதிபதி நீச்சம் பெற்று அங்கு ஆட்சி பெற்றுள்ள சந்திரபகவானுடன் இணைந்திருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். பூர்வபுண்ணியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றும் புதபகவான் ஆறாம் வீட்டில் உச்சம் பெற்றும் தொழில் லாப ஸ்தானாதிபதியான சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருப்பதும் சிறப்பு. அதனால் அரசு வேலை இன்னும் இரண்டாண்டுகளுக்குள் கிடைக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானை வழிபட்டு வரவும்.