எங்களுக்கு திருமணம் முடிந்து 28 மாதங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தைபாக்கியம் கிட்டவில்லை. எப்போது குழந்தைப்பேறு கிட்டும்? ஆண், பெண் வாரிசுகள்உண்டாகுமா? - வாசகர், வேளச்சேரி

உங்கலுக்கு கும்ப லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியுடன் கர்ம ஸ்தானத்தில் இணைந்து இருக்கிறார்கள். பூர்வபுண்ணிய ஸ்தானத்தை குரு, சந்திரபகவான்கள் பார்வை செய்கிறார்கள்

உங்கலுக்கு கும்ப லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியுடன் கர்ம ஸ்தானத்தில் இணைந்து இருக்கிறார்கள். பூர்வபுண்ணிய ஸ்தானத்தை குரு, சந்திரபகவான்கள் பார்வை செய்கிறார்கள். தற்சமயம் உச்சம் பெற்ற தைரிய தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருப்பது சிறப்பு. உங்கள் மனைவிக்கு கன்னி லக்னம், கடக ராசி. புத்திர ஸ்தானாதிபதி புத்திர ஸ்தானத்தைப் பார்ப்பது சிறப்பு. தற்சமயம் லக்னாதிபதியின் தசையில் ராகுபகவானின் புக்தி நடக்கிறது. உங்களுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் மழலை பாக்கியம் கிடைக்கும். இரண்டு குழந்தைகள் ஒரு பெண், ஓர் ஆண் உண்டு. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com