கடந்த நான்கு ஆண்டுகளாக பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறேன். நான் வசிக்கும் சொந்த வீடு வாஸ்து சரியில்லை என்கிறார்கள். என் தந்தையின் சொத்து விஷயமாக உடன்பிறந்தோருடன் தீராத பகையில் உள்ளேன். சொத்து கிடைக்குமா? வேறுவீடு வாங்கி குடிபோகும் யோகம் உண்டா? சட்டத்துறையில் ஈடுபட உள்ளேன். அதில் பிரகாசிக்க முடியுமா? ஆயுள் பாவம் எவ்வாறு உள்ளது? வீட்டில் தொலைந்து போன நகை மீண்டும் கிடைக்குமா? - வாசகர்

உங்களுக்கு கன்னி லக்னம், துலா ராசி. லக்னாதிபதி லக்னத்திலேயே உச்சம் பெற்றிருப்பதும் தன, பாக்கியாதிபதி தன ஸ்தானத்திலேயே மூலதிரிகோணம் பெற்றிருப்பதும் சிறப்பு.

உங்களுக்கு கன்னி லக்னம், துலா ராசி. லக்னாதிபதி லக்னத்திலேயே உச்சம் பெற்றிருப்பதும் தன, பாக்கியாதிபதி தன ஸ்தானத்திலேயே மூலதிரிகோணம் பெற்றிருப்பதும் சிறப்பு. பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ள சுக களத்திர ஸ்தானாதிபதியான குருபகவானுடன் இணைந்திருப்பது சிறப்பு. சட்டத்துறைக்கு காரகரான செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானத்தில் திக்பலம் பெற்றிருக்கிறார். உங்கள் தந்தையின் சொத்து உங்களுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும். சட்டத்துறையிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். சனிபகவான் வலுத்துள்ளதால் தீர்க்காயுள் உண்டு. திருட்டுபோன நகை திரும்ப கிடைக்கும் வாய்ப்பு குறைவு. பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com