தற்போது எனக்கு 39 வயதாகிறது. இன்னும் திருமணம் நடக்கவில்லை. திருமணம் எப்போது நடைபெறும்? தாய் தந்தையற்ற நான் முன்னோர் வழிபாடு செய்தால் திருமணம் நடக்குமா? தொழில் நல்லபடியாக எப்போது அமையும்? - வாசகர், தாராபுரம்

உங்களுக்கு ரிஷப லக்னம், துலாம் ராசி. களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியுடன் இணைந்து இருக்கிறார்.

உங்களுக்கு ரிஷப லக்னம், துலாம் ராசி. களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியுடன் இணைந்து இருக்கிறார். சுகாதிபதி சற்று பலம் குறைந்திருக்கிறார். மற்றபடி சுக ஸ்தானத்தில் தர்மகர்மாதிபதி அமர்ந்திருப்பது சிறப்பு. அதோடு சனிபகவானின் தசையும் தற்சமயம் நடக்கிறது. உங்களுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். முடிந்தால் ஒருமுறை ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்து விட்டு வரவும். மற்றபடி கடன்கள் அடையும். வீட்டையும் கட்டி முடித்து விடுவீர்கள். சனிபகவானின் தசையில் பிற்பகுதி சிறப்பாக அமையும். தொடர்வதும் உச்ச குருபகவானின் பார்வையை பெற்றிருக்கும் புதபகவானின் தசையாக இருப்பதால் நன்மைகள் தொடரும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com