அக்டோபரில் வெளிவரும் டாடா ஹெக்ஸா எஸ்யூவி!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் க்ராஸ்ஓவர் எஸ்யூவி மாடலான, டாடா ஹெக்ஸா, அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அக்டோபரில் வெளிவரும் டாடா ஹெக்ஸா எஸ்யூவி!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் க்ராஸ்ஓவர் எஸ்யூவி மாடலான, டாடா ஹெக்ஸா, அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டாடா மோட்டார்ஸின் ஆர்யா எம்பிவிக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்படும் ஹெக்ஸா எஸ்யூவி, 2.2 லிட்டர் வேரிகார் 400 டீசல் இஞ்சினுடன் வெளிவருகிறது. அதிகபட்சமாக 154 பிஹெச்பி ஆற்றலையும், 400 என்எம் இழுவைத்திறனையும் கொண்ட ஹெக்ஸா, 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் வெளிவரும்.  

ஹெக்ஸா எஸ்யூவி 4764 மிமி நீளமும், 1895 மிமி அகலமும், 1780 மிமி உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸானது 2850 மிமி ஆகும்.  நல்ல கட்டுமஸ்தான தோற்றத்துடன் வரும் ஹெக்ஸா, டூயல் டோன் டேஷ்போர்டுடன் ஹர்மான் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ரிவர்ஸ் கேமராவுடன் கூடிய 5.0 இஞ்ச் டச் ஸ்கிரீன், 3.5 இஞ்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், 10 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் (உயர் வேரியண்ட்களில்) என பல சிறப்பு வசதிகளை கொண்டிருக்கும். 

மேலும் டைனமிக் வெஹ்கிள் கண்ட்ரோல், டிசிஎஸ், இஞ்சின் ட்ராக் கண்ட்ரோல், ஆறு ஏர்பேக்குகள் வசதிகளுடன் வெளிவருகிறது ஹெக்ஸா.  

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஹெக்ஸா, இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னரே சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டியது.  ஹெக்ஸாவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 2.2 லிட்டர் வேரிகார் டீசல் இஞ்சினுக்கு மாற்றாக நல்ல ஆற்றல் வெளிப்படுத்தம் 2.0 லிட்டருக்கு குறைவான டீசல் இஞ்சின் டாடா மோட்டார்ஸிடம் இல்லாததாலும், சந்தைப்படுத்தலை அந்நிறுவனம் தள்ளிவைத்திருந்தது.  தற்போது அந்தத்தடை விலக்கப்பட்டு, இத்தகு வாகனங்களுக்கு கூடுதலாக ஒரு சதவீகிதம் அதிகமான பசுமைவரி விதிக்கப்பட்டு விற்பனை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், இஞ்சினில் மாற்றம் செய்யமாலயே அறிமுகப்படுத்த டாடா மோட்டர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.  சந்தைப்படுத்தப்படும்போது விலை ரூ. 12 லட்சத்திலிருந்து தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com