காற்றுப்பை செயல்பாட்டில் குறைபாடு: 2 லட்சம் கார்களை சீனாவிலிருந்து வாபஸ் பெறும் பி.எம் .டபிள்யூ!

முன்பக்க இருக்கைகளுக்கான காற்றுப்பை செயல்பாட்டில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டதால் ஏறக்குறைய 2 லட்சம் கார்களை சீன சந்தையில் இருந்து பி.எம் .டபிள்யூ நிறுவனம் வாபஸ் பெறுகிறது. 
காற்றுப்பை செயல்பாட்டில் குறைபாடு: 2 லட்சம் கார்களை சீனாவிலிருந்து வாபஸ் பெறும் பி.எம் .டபிள்யூ!

பீஜிங்: முன்பக்க இருக்கைகளுக்கான காற்றுப்பை செயல்பாட்டில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டதால் ஏறக்குறைய 2 லட்சம் கார்களை சீன சந்தையில் இருந்து பி.எம் .டபிள்யூ நிறுவனம் வாபஸ் பெறுகிறது. 

சீனாவின் தர கட்டுப்பாடு மற்றும் நிர்ணயத்திற்கான பொது அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிகையில் இந்த தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. அதன் படி பி.எம் .டபிள்யூ நிறுவனத்தின் கார்களில் ஓட்டுநர் மற்றும் முன் இருக்கை பயணிகளின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள காற்றுப்பைகள்  செயல்படும் பொழுது, வாகனத்தின் 'கேஸ் ஜெனெரேட்டர்கள்' செயல்பாட்டில் மாறுதல் ஏற்பட்டு, வாகன உள்பகுதியில் வாயுக் கசிவு உண்டாகிறது.  இதனால் பயணிகளுக்கு ஆபத்து உண்டாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறைபாடானது ஜுலை 2005-ல் தொடங்கி டிசம்பர் 2011 வரையான காலகட்டத்தில் பல்வேறு தருணங்களில் சீனாவில் இறக்குமதி செய்யப்பட்ட, 1,93,611 கார்களில் கண்டறியப்பட்டுள்ளது.         .

வரும் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் இந்த திரும்ப பெரும் நடவடிக்கை தொடங்க உள்ளது. இந்த சேவையானது முழுவதும் இலவசமாக செய்து தரப்படும் என்று அந்நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com