ஹோண்டா டபிள்யூஆர்வி  எஸ்யூவி விரைவில் அறிமுகம்!

ஹோண்டா கார் நிறுவனம் பிஆர்வி மற்றும் சிஆர்-வி எஸ்யூவி கார்களை தொடர்ந்து டபிள்யூஆர்வி என்னும் காரை இந்தியாவில் களமிறக்கும் என்று தெரிகிறது.
ஹோண்டா டபிள்யூஆர்வி  எஸ்யூவி விரைவில் அறிமுகம்!

ஹோண்டா கார் நிறுவனம் பிஆர்வி மற்றும் சிஆர்-வி எஸ்யூவி கார்களை தொடர்ந்து டபிள்யூஆர்வி என்னும் காரை இந்தியாவில் களமிறக்கும் என்று தெரிகிறது.

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் இது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற காம்பேக்ட் ரக எஸ்யூவிகளுக்கு போட்டியாக வரும்.  இது ஹோண்டா ஜாஸ் காரின் ப்லாட்பார்மில் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

டபிள்யூஆர்வி காரில் 1.2 லிட்டர் 89 பிஎச்பி ஐவிடெக் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் ஐடிடெக் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்படும்.

பிளாஸ்டிக் கிளாடிங்குகள், ஹெட்லைட்டுகிடையிலான் க்ரோம் பட்டை, ரூஃப் ரெயில்கள் மற்றும் வலிமையான தோற்றம் என அனைத்து எஸ்யூவி குணங்களும் இந்த டபிள்யூஆர்வில் அடக்கம். இன்டீரியர் டிசைன் பெரும்பாலும் ஜாஸ் மற்றும் அமேஸ் கார்களை ஒத்தே இருக்கின்றது. பாகங்களும் ஜாஸ் மற்றும் அமேஸ் கார்களில் பயன்படுத்தியதே பயன்படுத்தப்படும் உற்பத்தி செலவை குறைப்பதற்காக. வரும் மார்ச் மாதம் டபிள்யூஆர்வி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Credits: Swaraj Tractors

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com