அடுத்த தலைமுறைக்கான ‘அச்சிவர் 150’: ஹீரோ மோட்டோ கார்ப்பின் புதிய அறிமுகம்!

உலகிலேயே இருசக்கர வாகனங்களை அதிகமாக உற்பத்தி செய்து வரும் ஹீரோ மோட்டார்  கார்ப்  நிறுவனம் புதிதாக, “அச்சீவர் 150 ’’என்ற பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
அடுத்த தலைமுறைக்கான ‘அச்சிவர் 150’: ஹீரோ மோட்டோ கார்ப்பின் புதிய அறிமுகம்!

உலகிலேயே இருசக்கர வாகனங்களை அதிகமாக உற்பத்தி செய்து வரும் ஹீரோ மோட்டார்  கார்ப்  நிறுவனம் புதிதாக, “அச்சீவர் 150 ’’என்ற பைக்கை அறிமுகம் செய்துள்ளது.

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் ஓட்டுமொத்த  இரு சக்கர வாகன உற்பத்தி 70 மில்லியன்களாக அதிகரித்துளளது. இந்த சாதனையை படைத்த இந்தியாவில் உள்ள ஒரே இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் இதுவேயாகும். 

நிறுவனத்தின் 70 மில்லியன் வாகன உற்பத்தி மறறும் இந்தியாவின் 70வது  ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு  நிறுவனம் அச்சீவர் 150 என்ற புதிய பைக்கை அறிமுகம் செய்கிறது. இது குறைந்த உற்பததியை கொண்டதாகும்.  70 ஐ குறிக்கும் வகையில் 70 வாகனங்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

அச்சீவர் 150  வலுவான தொழில்நுட்பத்தை  கொண்டுள்ளது. பிஎஸ்-ஐவி இன்ஜின் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதில் ஹிரோ நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற  ஐ3 எஸ் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக சிறப்பாக செல்படுவதோடு எரிபொருள் சிக்கனத்தை கொண்டதாகும். 

இதில் உள்ள காற்று குளிர்விக்கும் ஒற்றை சிலிண்டர் 4 ஸ்ரோக் என்ஜினை கொண்டதாகும். இது அதிகபட்சமாக’10கிலோ வாட் சக்தியை வெளிப்படுத்தும். புதிய அனலாக் டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், சைடு ஸ்டாண்டு இண்டிகேட்டர், பெரிய எரிபொருள் டேங்க், டிஸ்க் பிரேக் சிஸ்டம் உள்ளிட்ட பல சிறம்பம்சங்கள் உள்ளன. இந்த புதிய பைக் விலை ரூ Rs. 62,800/- (டில்லி ஷோரூம் தவிர்த்து) ஆகும்.

இந்த அச்சீவர் 150 பைக்கை அறிமுகம் செய்வதன் வாயிலாக பிரீமியம் வகை பைக் உற்பத்தியில் ஹீரோ மோட்டோ கார்ப் தீவிரமாக இறங்க உள்ளது. ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் ஏற்கனவே 100 சிசி, 120சிசி வகை பைக் உற்பத்தியில் முறையே 65  சதவீதம், 55 சதவீதம் மார்க்கெட் பங்கை  கொண்டுள்ளது.

ஹிரோ நிறுவனத்தின் அடுத்து வரும் தயாரிப்புகள் அனைத்தும் பிரிமீயம் வகையை சேர்ந்ததாக இருக்கும் என்பதை உணர்த்துவதாக இந்த அறிமுகம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com