சுஸுகி மோட்டார் சைக்கிள் தயாரிப்பு 30 லட்சத்தை தாண்டியது!

சுஸுகி மோட்டார் சைக்கிள் உற்பத்தி 30 லட்சத்தை தாண்டி சாதனை படைத்தது.

சுஸுகி மோட்டார் சைக்கிள் உற்பத்தி 30 லட்சத்தை தாண்டி சாதனை படைத்தது.
இதுகுறித்து சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சடோஷி உசிதா திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
சுஸுகி நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் உற்பத்தி 30 லட்சம் என்ற மைல்கல்லை தாண்டி சாதனை படைத்தது.
ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள நிறுவனத்தின் ஆலையில் இந்த சாதனை எட்டப்பட்டது. ஜிக்ஸர், நியூ ஆக்சஸ் 125 உள்பட பல மாடல் வாகனங்கள் அந்த ஆலையில் தயாரிக்கப்படுகின்றன.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையுடன் கூடிய ஆதரவு, எங்கள் பணியாளர்களின் அயராத உழைப்பு, விநியோகஸ்தர்களின் ஒத்துழைப்பு உள்ளிட்டவையே இந்த குறிப்பிடத்தக்க சாதனை அளவை எட்டியதற்கு முக்கிய காரணம்.
கடந்த சில ஆண்டுகளாகவே சுஸுகி தயாரிப்புகளுக்கு சந்தையில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இது, நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பை மேலும் அதிகரிக்க உதவும்.
குருகிராம் ஆலையின் தற்போதைய உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 5.4 லட்சமாக உள்ளது. இதனை அதிகரிக்கத் திட்டமிட்டு வருகிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com