ராயல் என்ஃபீலடு ஹிமாலயன் FI பைக் விற்பனைக்கு வந்தது

ரூபாய் 1,60,500 விலையில் பாரத் ஸ்டேஜ் 4 தர எஃப்ஐ எஞ்சினை பெற்ற ராயல் என்ஃபீலடு ஹிமாலயன் FI பைக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீலடு ஹிமாலயன் FI பைக் விற்பனைக்கு வந்தது

ரூபாய் 1,60,500 விலையில் பாரத் ஸ்டேஜ் 4 தர எஃப்ஐ எஞ்சினை பெற்ற ராயல் என்ஃபீலடு ஹிமாலயன் FI பைக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

முந்தைய கார்புரேட்டர் பொருத்தப்பட்ட எஞ்சினுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய FI பொருத்தப்பட்ட ஹிமாலயன் பைக்கில் 24.5 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 411சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 32 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.

முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின் சக்கரத்தில், மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது. முன்புற டயரில் 2-பிஸ்டன் கேளிப்பர்கள் கொண்ட 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் டயரில் ஒற்றை பிஸ்டன் கேளிப்பர் கொண்ட 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தபட்டுள்ளது. வண்டியின் முன்பக்க சக்கரம் 21 இஞ்ச் மற்றும் பின் சக்கரம், 18 இஞ்ச் கொண்டுள்ளது.

அனைத்து புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளும் பிஎஸ் 4 எஞ்சினுடன் ஏஹெச்ஒ ஆப்ஷனை பெற்றுள்ளதால் அதிகபட்சமாக ரூபாய் 6,000 வரை விலை அதிகரித்துள்ளது.

முந்நைய மாடலை விட சற்று விலை அதிகரிக்கப்பட்டு ரூபாய் 1.60 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து கொண்டால் மே மாத மத்தியில் டெலிவரி கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com