புதிய மாடல் கார் அறிமுகத்துக்காக ரூ.5,000 கோடி முதலீடு: ஹுண்டாய்

இந்தியாவில் புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்துவதற்காக ரூ.5,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக ஹுண்டாய் மோட்டார் தெரிவித்துள்ளது.
ஹுண்டாய் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய எக்ùஸன்ட் காரை வியாழக்கிழமை புதுதில்லியில் அறிமுகம் செய்யும் அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான ஒய்.கே. கூ.
ஹுண்டாய் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய எக்ùஸன்ட் காரை வியாழக்கிழமை புதுதில்லியில் அறிமுகம் செய்யும் அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான ஒய்.கே. கூ.

இந்தியாவில் புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்துவதற்காக ரூ.5,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக ஹுண்டாய் மோட்டார் தெரிவித்துள்ளது.
புதிய எக்ùஸன்ட் மாடல் கார் அறிமுக நிகழ்ச்சி புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான ஒய்.கே. கூ தெரிவித்ததாவது:
வரும் 2021-ஆம் ஆண்டுக்குள் ஹுண்டாய் கார் விற்பனையை இரண்டு மடங்காக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்காக, 2020-ஆம் ஆண்டுக்குள் 8 புதிய மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளோம். அதில் புதிய பிரிவில் உயர்வகை தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மூன்று மாடல்களும் அடங்கும். 2020-ஆம் ஆண்டு வரையில் ஆண்டுக்குத் தலா இரண்டு புதிய மாடல் கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளோம்.
புதிய மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்காக ரூ.5,000 கோடியை முதலீடு செய்யவுள்ளோம். 2021-க்குள் ஆண்டுக்கு 10 லட்சம் கார்கள் என்ற விற்பனை இலக்கை எட்டுவதே எங்களின் முதன்மையான குறிக்கோள்.
கடந்த ஆண்டில் நிறுவனத்தின் கார்கள் விற்பனை 6.62 லட்சமாக இருந்தது. அதில், உள்நாட்டில் மட்டும் 5 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டன.
அதன் மூலம், இந்தியாவில் பயணிகள் கார் சந்தையில் 17 சதவீத பங்களிப்பை தக்க வைத்துக் கொண்டோம்.
தற்போதைய நிலையில், இந்தியாவில் ஹுண்டாய் நிறுவனத்தின் 10 மாடல் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
வேகமாக மாறி வரும் கால சூழல் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு தக்கவாறு செயல்பட்டு வருவதே ஹுண்டாய் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய அடிப்படை. அதன் ஒரு பகுதியாகவே தற்போது எக்ùஸன்ட் காரை புதிய வடிவில் அறிமுகம் செய்துள்ளோம்.
கடந்த 2014-ஆம் ஆண்டில் எக்ùஸன்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டது முதல் உள்நாடு, வெளிநாடு என மொத்தம் 2.5 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. வாடிக்கையாளர்களிடம் காணப்பட்ட வரவேற்பை கருத்தில் கொண்டே நவீனரக தொழில்நுட்பத்தில் புதிய வடிவில் எக்ùஸன்ட் காரை அறிமுகம் செய்துள்ளோம்.
பகல் பொழுதில் எரியக்கூடிய எல்.இ.டி. விளக்குகள், சுத்தமான காற்றோட்ட வசதிக்கான சக்கர காற்று திரைகள், ஷார்க் ஆன்டனா உள்ளிட்ட பல நவீன தொழிநுட்ப வசதிகள் புதிய மாடல் எக்ùஸன்ட் காரில் அமைக்கப்பட்டுள்ளன.
பெட்ரோலில் இயங்கும் ஆறு மாடல்களில் அறிமுகமாகியுள்ள எக்ùஸன்ட் காரின் விலை ரூ.5.38 லட்சம் முதல் ரூ.7.51 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் பிரிவில் ஐந்து மாடல்களின் விலை ரூ.6.28 லட்சம் முதல் ரூ.8.41 லட்சம் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று ஒய்.கே. கூ மேலும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com